search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னிய செலாவணி"

    அன்னிய செலாவணி விதிமுறை மீறல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பாடகர் ரகத் படே அலிகானுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ED #PakistaniSinger
    புதுடெல்லி:

    பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ரகத் படே அலிகான். இந்தி படங்களில் பாடியதால், இந்தியாவிலும் புகழ் பெற்றவர். இவர், கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்திறங்கியபோது, அவரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ், அவர் மீதும், அவருடைய குழுவினர் மீதும் கடந்த 2014-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து 45 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ரகத் படே அலிகானுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ED #PakistaniSinger
    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
    சென்னை:

    சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

    இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

    இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

    மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
    ×